அழகான ஃபினிஷிங் தரும் அலுமினியம் ஃபார்ம்வொர்க்

கட்டுமானத்தின் கான்கிரீட் சுவர், பில்லர், தளங்கள், பால்கனிகள், படிக்கட்டுகள் போன்ற எல்லா பாகங்களுக்கும் ஐஹிதா இஞ்சினியரிங் நிறுவனத்தின் ஃபார்ம்வொர்க் மிகவும் ஏற்றது.
பில்லர், கான்கிரீட் சுவர், தளங்கள் போன்ற கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஃபார்ம்வொர்க் பொருட்கள் ஒரு காலத்தில் மரங்களாக இருந்தன. பிறகு, ஸ்டீல் பயன்படுத் தப்பட்டது. ஆனால், தற்பொழுது அலுமினியத்தில் ஃபார்ம்வொர்க் பொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அலுமினியம் என்றாலே, இலேசானது, வளையக்கூடியது என்கிற எண்ணமே நம்மிடம் மேலோங்கியிருக்கும். ஆனால், ஃபார்ம்வொர்க் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அலுமினியம் உறுதியானவை, கடினமானவை. எடை தாங்கும் திறனுடையவை. அலுமினியம் ஃபார்ம்வொர்க் கொண்டு கான்கிரீட் ஸ்ட்ரக்சர் அமைக்கும்போது பணிகள் வேகமாகவும், எளிமையாகவும், அதே சமயத்தில் பொருள் சிக்கனமாக வும் இருக்கும்.கட்டிடத்தின் சுவர்கள், கூரை தளங்கள், கான்கிரீட் சுவர், படிக்கட்டுகள், பால்கனிகள், கைப்பிடிகள் போன்ற எல்லா வித கட்டுமான உறுப்புகளுக்கும் வழவழப்பான, சீரான கான்கிரீட் ஃபினிஷிங் வேண்டுமெனில், அலுமினியம் ஃபார்ம்வொர்க்கே சிறந்ததென நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த ஐஹிதா இஞ்சினியரிங் நிறுவனத்தின் அலுமியம் ஃபார்ம்வொர்க்குகள் பன்னடுக்கு மாடிக் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளுக்கும் ஏற்றவை. தளங்களுக்கும், பில்லர்களுக்கும் இடையே செல்லக்கூடிய பிளம்பிங் மற்றும் எலெக்ட்ரிகல் பைப்புகளுக்கேற்ற வழிகளை தன்னகத்தே கொண்டிருக்கக்கூடியது ஐஹிதாவின் அலுமினியம் ஃபார்ம்வொர்க் பொருட்கள். இவை அதிக எடை இல்லாததால் கிரேன்கள் கொண்டு கையாள வேண்டும் என்கிற அவசியமில்லை. இவற்றைப் பொருத்துவதற்கு விசேக்ஷப் பயிற்சியும் தேவையில்லை. இவற்றை நிறுவுவதும், அகற்றுவதும் மிகவும் எளிதானது. இதை உபயோகித்தால் பூச்சுவேலை தேவைப்படாது. தொழில்முறை கட்டுநர்கள், கான்ட்ராக்டர்கள் இவற்றை தங்கள் தேவைக்கேற்ப வாங்கி வைத்துக் கொள்வது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும்.
அலுமினியம் ஃபார்ம்வொர்க் பொருட்கள் தயாரிப்பைத் தவிர, ஹெவி ஸ்டீல் ஃபார்ம்வொர்க் மற்றும் சிஸ்டம் ஃபார்ம்வொர்க் இன்ஸ்டாலேக்ஷன் பணிகளையும் ஐஹிதா இஞ்சினியரிங் நிறுவனம் செய்து தருகிறது.
IHITA ENGINEERING SERVICES P. LTD.
10, 4TH CROSS STREET, SVS NAGAR,
VALASARAVAKKAM, CHENNAI - 600087
E mail : info@ihita-es.com
Mob : 9940173555 , 9566011128
Ph: 044 24867415 ,www.ihita-es.com
Post a Comment