கண்ணாடி நகரம் - சிகாகோ,அமெரிக்கா


அமெரிக்காவில் 2 வது அதிக மக்கள் வசிக்கும் நகரமான சிகாகோவிற்கு கண்ணாடி நகரம் என்ற பெயரும் உண்டு. கண்ணாடியை காலம் காலமாக உற்பத்தி செய்யும் பெல்ஜியத்திற்குக்கூட இது போன்ற அடைமொழி இல்லை. சிகாகோவிற்கு மட்டும் ஏன் வந்தது? எல்லாம் கண்ணாடி ஆர்க்கிடெக்சரின் வேலைதான்.

அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிட்டால் பரப்பளவில் சிகாகோ சற்று சிறிய நகரம்தான். மொத்தமே 468 சதுர மைல்கள் (1212 .கி.மீ).சென்னையை விட இது இரு மடங்கு பெரியது என்றாலும் அங்கு புழங்கும் மக்கள் 38 லட்சம் ஆகும். (அட நமது சென்னையில் 1கோடி மக்கள் அல்லவா வாழ்கிறார்கள்?).

தொழில்களும் வேலை வாய்ப்புகளும் நாளுக்கு நாள் அதிக
மாக சிகாகோவில் குடியிருப்புகள் எல்லாம் கட்டாயமாக புறநகர் பகுதிகளுக்கு புறம் தள்ளப்பட்டு விட்டன. அலுவலகங்களுக்கே முதலுரிமை கொடுத்து கட்டப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக 35% மட்டுமே குடியிருப்புக்களை நகரின் மையப்பகுதிகளில் காணலாம். அனைத்து கட்டிடங்களுமே 120 மாடிகள், 150 மாடிகள் என்று செங்குத்தாக கட்டப்பட்டாலும் கூட, வசிப்பதற்கும், அலுவலகம் நடத்துவதற்கும் இடமின்றி விழி பிதுங்குகிறார்கள் அமெரிக்கர்கள்.

மாடிகளை எத்தனை அடுக்கு களாக கட்டினாலும் கட்டுமானச் செலவைக் குறைக்க வேண்டுமே?அதே போன்று இட நெருக்கடி என்பதை சற்றும் உணராத அளவில் அனைத்து கட்டிடங்களுமே பசுமைக் கட்டிடமாக கட்ட வேண்டிய கட்டாயமும் அங்கு உண்டு. எனவேதான், கண்ணாடியைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் அமெரிக்கர்கள்.

அங்கு சுற்றுச் சுவர்களாக செங்கல் சுவர்களையோ, பிரிகாஸ்ட் கட்டுமானங்களையோ நாம் எதிர்பார்க்க முடியாது. கான்கிரீட் பீம் மற்றும் தளங்களுடன் அங்கு 90% கட்டுமான பணி முடிந்து விடுகிறது. அதற்குப் பிறகு சுற்றுச்சுவர்களுக்கு 8 X 4 அளவிலான 12மி.மீ தடிமனுடைய கண்ணாடிகளையே பயன்படுத்துகிறார்கள். இதனால் வெளிக் கட்டிடங்களிலிருந்து நம்மை கண்காணிக்கக் கூடுமே என்பதைப் பற்றிக்கூட நிச்சயம் அவர்கள் கவலைப்படுவது கிடையாது.கண்டிப்பாக மறைப்பு வேண்டும் என்று எண்ணும் இடங்களான படுக்கை அறை, குளியல் அறை, கழிப்பறை போன்ற பகுதிகளுக்கு மட்டும் வுட்டன் அல்லது பிவிசி பார்டீஷியன்களை பயன் படுத்துகிறார்கள்.

இதனால், மொத்த கட்டிடத்தின் எடை குறைகிறது. கட்டுமானப் பணிகள் எளிதில் நிறைவடைகிறது. நேரம் மிச்சமாகிறது. கட்டுமானச் செலவு கணிசமாக குறைகிறது. மேலும், கண்ணாடி கட்டுமானம் என்பது பசுமைக் கட்டிடத்தின் முதற் படிகட்டு என்ற அனுகூலமும் இவ்வகை கட்டுமானங்களுக்கு உண்டு.


Post a Comment

 
Top