கவனம் ஈர்க்கும் வரவேற்பு அறை
வீட்டில்
இருக்கும் அறைகளில் வரவேற்பு அறை தனித்துவமாக தெரிய
அலங்கார பொருட்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கும். வீட்டுக்கு
வரும் விருந்தினர்களுடன் அமர்ந்து பேசும் இடமாக இருப்பதால்
அவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக அசத்தலாக அலங்கரிக்க
வேண்டும் என்ற எண்ண ஓட்டம்
அலங்கரிப்பில் வெளிப்பட்டு இருக்கும்.
மலர் அலங்காரம்
வரவேற்பரையில்
விதவிதமான அழகு சாதனங்கள் அழகு
சேர்க்க குவிந்திருந்தாலும் பர்னிச்சர்களுக்கு மத்தியில்
இடம் பெறும் மேஜையை அலங்கரிப் பதும்
அழகுக்கு மகுடம் சேர்க்கும். அமர்ந்து
பேசிக்கொண்டு இருப்பவர் களின்
கவனத்தையும் கவரும் என்பதால் மேஜையில்
கண்டிப்பாக மலர்களுக்கு இடம் ஒதுக்கியாக வேண்டும்.
வெண்கல
கிண்ணம் அல்லது கண்ணாடியால் ஆன
கிண்ணத்தில் நீர் ஊற்றி அதில்
மலர்களை போட்டு
வைத்து அலங்கரிக்கலாம். அவை காலையில் பூத்த
புத்தம் புது மலர்களாக இருந்தால்
பார்ப்பவர்களுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். ஒரே வகையான மலராக
அல்லாமல் வண்ண வண்ண மலர்களை
இடம் பெற செய்வது கண்களை
ஈர்க்கும். மனதுக்குள்ளும் மகிழ்ச்சியை பரவ செய்யும்.
கலை படைப்புகளின் சிற்பங்கள்
கலை நுணுங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பூ ஜாடிகளை
வைத்தும் மேஜையை அழகு படுத்தலாம்.
அந்த பூஜாடியில் இடம் பெறும் மலர்களும்
மேஜையின் அமைப்புக்கு ஏற்ற வகையில் அமைந்தால்
அழகும் அதிகரிக்கும்.
மேஜை மீது கலை நயம்
கலந்த வண்ண நிறங்களால் ஆன
விரிப்புகளை கொண்டு அலங்கரிப்பது அறையின்
அலங்காரத்துக்கு மெருகூட்டும்.
மேஜை மீது வெண்கலத்தால் ஆன
சிலை, புகழ்பெற்ற கலை படைப்புகளின் சிற்பங்களை
இடம்பெற செய்வது பாரம்பரியத்தை பறை
சாற்றுவதாக அமையும். மேஜை மீது நாளிதழ்கள்,
புத்தகங்களை நேர்த்தியாக அடுக்கியும் அழகு படுத்தலாம். கண்ணாடியால்
ஆன உருண்டைகள், பேனாக்கள் வைக்கும் ஸ்டாண்டுகள் என சிறிய அளவிலான
அழகு பொருட்களை வைத்தும் மேஜையை அலங்கரிக்கலாம்.
மெழுகுவர்த்திகளும்
அழகு தரும்
மேஜை அலங்காரத்தில் மெழுகுவர்த்திக்கு தனி இடம் உண்டு.
அந்தி சாயும் மாலை, இரவு
நேரங்களில் மேஜையின்
நடுவில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தால் அறையே
அதன் ஒளியால் அழகு பெறும்.
அதிலும் வரிசையாக
அடுக்கி வைக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் தரும் பிரகாசம் தனி
அழகை வெளிப்படுத்தும்.
மனமும்
அமைதியான சூழலை அனுபவிக்கும். மேஜையில்
இடம் இருக்கிறது என்று ஒரேடியாக அலங்காரத்தை அதில்
திணித்து விடக்கூடாது. சின்ன சின்ன பொருட்களே
அழகை அதிகப்படுத்துவதில் பங்கெடுக்கும். வீட்டுத்தோட்டத்தில் பூக்கும் மலர்களை கொண்டே அலங்காரத்தை
அமர்க்களப்படுத்தலாம். தேவை இல்லாத பொருட்கள்
மேஜையில் இடம் பெறுவதை தவிர்க்க
வேண்டும். அதுவே எளிய அலங்காரத்துக்கு
அழகு சேர்க்கும்.
Post a Comment