துபாயை கலக்கும் ஹாலோ கோர் சிலாப்
துபாய் கட்டிடங்களை எப்படி வாரக்கணக்குகளிலேயே கட்டி முடித்து விடுகிறார்கள் என்று பார்த்தால் அதன் பின்னணி ஹாலோ கோர் சிலாப் (Hollow Core Slab) என்கிற கூரைக் கட்டு மானப் பொருள்தான். துபாயில் பல நிறுவனங்கள் செங்கல் மாதிரி இதை போட்டு விற்கிறார்கள். இதன் அளவு 8.5 X 1.2 X 0.2 மீ. உள்ளே இருக்கும் கம்பிகள் வெறும் 9 தான். தூணின் இரு பக்கத்திலும் பீம் போட்டு விட்டு அதன் மேல் இந்த சிலாபை வைத்தால் முடிந்தது கூரை. மஸ்கட்டில் தற்போது புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஐந்து மாடி ஆசிய கடற்கரை விளையாட்டு கட்டிடங்கள் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டவைதான்.

இதன் அனுகூலங்கள் :
பில்டிங் கட்டுமானம் ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த வேலையை ஆரம்பித்து விடலாம். இதனால் நேரம் மிச்சமாகும். அருமையான ஃபினிஷிங் அதனால் மேற்பூச்சு என்ற வேலையே இல்லை. கம்பி கிடையாது அதனால் கம்பி வேலை என்று சொல்லப்படுகிற பார் பெண்டிங் வேலை இருக்காது. ஃபார்ம் ஒர்க் அல்லது சென்டரிங் என்ற வேலையே கிடையாது. வேண்டிய அளவுக்கு செய்து கொள்ளலாம் என்பதால் நம் தேவைக்கு ஏற்ற அளவில் கிடைக்கும். எரக்க்ஷன் அல்லது பொருத்தும் வேலை மிகவும் சுலபம். அதோடில்லாமல் குறுகிய காலத்தில் விரைவாக முடிக்க முடியும். சிலாபின் மத்தியில் ஓட்டை இருப்பதால் மேலும் கீழும் தெர்மல் இன்சுலேக்ஷன் கிடைக்கும்.

ஆனால்,சிலாப் அளவுகளை நினைத்த நேரத்திற்கு மாற்ற முடியாது. சிலாப்புகளுக்கு இடையே உள்ள ஜாயிண்டை மூட தனி தொழிற்நுட்பம் தேவை போன்ற சிறு குறைபாடுகளும் இதில் இருக்கத்தான் செய்கிறது.
Post a Comment