உலக மெகா வுட்டன் ஆர்க்கிடெக்சர் - ஸ்பெயின்


உலகின் நீளமான மிகப் பெரிய கட்டுமானம் ஒன்றை முழுக்க முழுக்க மரத்தாலேயே வடிவமைத்து இருக்கிறார்கள். இது திறக்கப்பட்ட உடனேயே கின்னஸ் காரர்கள் ஓடிவந்து பதிவு செய்து விட்டார்களாம்.

இது ஒரு கட்டிடமா? கோவிலா? சுற்றுலா இடமா? என்று கேட்டால் எதும் கிடையாது. இது ஒரு மியூஸியம் அவ்வளவுதான். அது தவிர, கண்காட்சிகள் நடத்துவதற்கென மிக பெரிய அரங்குகள். அதற்கு, எதற்கு மரம்? புதுமையான வடிவமைப்பு? இத்தனை ஆர்ப்பாட்டம்? என்று நீங்கள் கேட்டால், விக்ஷயம் இருக்கிறது.

தெற்கு ஸ்பெயினின் தலைநகரமான ' செவாலியா (SEVALIA)' என்கிற நகரத்தில், இந்த உலக மெகா வுட்டன் கட்டுமானம் அமைந்திருக்கிறது.மெட்ரோபோல் பெராசல் என்கிற நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கட்டிடத்தை வடிவமைத்தவர் ' ஜர்கன் மேயர். எச் ' என்கிற ஸ்பெயின் நாட்டு ஆர்க்கிடெக்ட். உலகெங்கும் உள்ள 50 புதுமையான கட்டிடங்களில் 6 கட்டிடங்களை வடிவமைத்தவர் என்கிற பெருமை இவருக்கு உண்டு. செவாலியா நகரத்தின் மத்தியில்மியூஸியம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் பெராசல் நிறுவனம் ஈடுபட்டிருந்த போது, ஜர்கன் மேயர் 100 க்கும் மேற்பட்ட கட்டிட மாதிரிகளை அனுப்பி இருந்தாராம். அவற்றுள் இந்த மரக்கட்டுமான திட்ட வரைபடம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டதாம். அதற்கும் காரணம் இருக்கிறது.

ஸ்பெயின் நாட்டு மக்கள் மர வீடுகளை அதிகம் விரும்பு பவர்கள். வீட்டுக் கட்டுமானங்கள் மட்டும் அல்லாது வீட்டிலுள்ள அனைத்து பொருட்களுமே மரத்தால் ஆனவை களைத்தான் விரும்புவார்கள். எனவே தான் இந்த மெகா வுட்டன் மியூஸியம். எல்லா மியூஸியங்களைப் போலவே இங்கும் தலைவர்களின் சிற்பங்கள், அரிய பொருட்களின் தொகுப்பு போன்றவைகள்தான் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.
மரத்தினாலானது என்பதுதான் இதன் விசேக்ஷமே. எவ்வளவு வெயில் அடித்தாலும் உஷ்ணம் உள்ளே வராத அளவிற்கும், தூய்மையான காற்று எளிதாக உள்ளே வரும் அளவிற்கும் இது நேர்த்தியாக கட்டப்பட்டு இருக்கிறது.

60
அடி உயரம், 882அடி நீளம், 32அடி சராசரி அகலம் உடைய இந்த மரக் கட்டுமானம் ஏறக்குறைய 20ஆயிரம் சதுர மீட்டர்களில் கட்டப்பட்டு இருக்கிறது. இதன் அடித்தளம் தவிர வேறு எங்குமே கான்கிரீட் பயன்படுத்தப்படவில்லை. சுவர்கள், தரைகள், கூரைகள், படிகட்டுகள் என எல்லாமே மரத்தினால் ஆனவைதான். கட்டுமானம் உருவாவதற்கு 200 மில்லியன் யூரோக்கள், 2ஆண்டுகள் செலவாகியிருந்தாலும் செவாலியா நாட்டிற்கு, இது ஒரு பெருமைச் சின்னமாக மாறி இருக்கிறது.
மனிதனின் உச்சபட்ச கலைத் திறனை வெளிக் கொண்டு வந்திருக்கும் இந்த மரக்கட்டுமானம் மறைமுகமாக தீங்கும் விளைத்திருக்கிறது. ஆம்! இது உருவாவதற்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை 45 ஆயிரங்களைத் தாண்டி விட்டதாம். அம்மாடி!

Post a Comment

 
Top