மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures பார்ட் 1

என்ன எனது போன மதுரை விரைவில் மெட்ரொ நகரமாக மாறும்... பதிவை படித்து மலைத்துவிட்டீர்களா??? இதையும் படியுங்கள்... மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructures...

விமான போக்குவரத்து...
சுமார் 18000 ச.அடி, ஐந்து தானியங்கி படிக்கட்டுகள் (Escalators), ஏழு லிப்ட், நவீன ஸ்கெனிங் வசதி, முற்றிலும் CCTV’s, முழுவதும் கண்ணாடியாலான வெளிபுற தோற்றம் இவை அனைதும் அடங்கிய முற்றிலும் நவீனமையமான கட்டிடம் ரூ.150 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம்.
1. ஓடுதளம் 6000 அடியிலிருந்து 7500 அடியாக விரிவாக்கப்படுகிறது அதற்கு அடுத்த படியாக 9000 அடி மற்றும் 12500 அடியாக விரிவாக்கப்பட உள்ளது.
2. Paking Bay 3லிருந்து 6ஆக விரிவாக்கப்பட உள்ளது. ஒரு புதிய parking bay கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
3. மதுரை விமான நிலையத்தில் மற்றொரு எரிபொருள் நிரப்பும் நிலையம் ரிலையன்ஸ்-கிரின் நிறுவனம் அமைக்கப்பட உள்ளது.
4. இந்தியன், ஸ்ரீலங்கன், மலெசியன் விமான நிறுவனங்கள் விரைவில் மதுரையிலிருந்து தெற்காசிய நாடுகளுக்கும், Gulf நாடுகளுக்கும், ஐரோப்பா நாடுகளுக்கும் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது. இந்த நிறுவனங்கள் திருச்சியை விட மதுரையில் போக்குவரத்தை தொடங்க ஆவலோடுள்ளன.
5. சின்ன ஒடைப்பு அருகே சுமார் 2கிமீ Ring Road மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கா அகற்றப்பட உள்ளது. அந்த வழி CIRAC மருத்துவமனையிலிருந்து குசவகுண்டு மற்றும் வளையன்குளத்திற்க்கு திருப்பி விடப்படுகிறது.
இதை போல் மதுரையில் விரிவாக்கப்பட உள்ள Infrastructureல் சாலை போக்குவரத்து பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Post a Comment

 
Top