கேள்வி:பதில்

நாங்கள் புதிதாகக் கட்டியுள்ள வீட்டில் சில அழகான பெயின்டிங்குகள், ஓவியங்களை வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறேன். ஆனால் அசலான, பிரபல ஓவியங்களின் படங்களை விலை கொடுத்து வாங்குவது பெரிய பட்ஜெட் விஷயமாகத் தெரிகிறது. கொஞ்சம் குறைந்த செலவில், சட்ட விவகாரங்கள் எதுவும் வராத ஓவியங்களைப் பெற வழி இருக்கிறதா?

பதில் :
தங்களுடைய கலை இரசனை பாராட்டுக்குரியது. உண்மையான ஓவியங்களை விலை கொடுத்து வாங்குவது கோடீசுவரர்க ளுக்குத்தான் கட்டுபடியாகக் கூடிய ஒன்று. இருந்தாலும் அதே மாதிரியான ஓவியங்களைக் குறைந்த விலைக்கும் வாங்கலாம். அவை அசல் ஓவியங்களாக இருக்காது என்பதைத் தவிர வேறு சிக்கல் எதுவும் வராது.
உரிமை பெற்ற பதிப்பாக இல்லாவிட்டால் வழக்குத் தொடுப்பார்களோ என்கிற அச்சமும் இல்லாமல் கலை அழகு மிக்க ஓவியங்களின் நகல்களை வாங்கிப் பயன்படுத்தலாம். இணையத்தில் இதற்கு வழி இருக்கிறது. உலகின் எந்தவொரு புகழ் பெற்ற ஓவியரின் படைப்பையும் நீங்கள் இணையத்தில் வாங்க முடியும். விலையும் ஆயிரத்திற்குள்தான் இருக்கும். கையால் வரையப்பட்ட ஓவியங்கள்,புகைப்படங்கள், திரைப்படங்கள், அச்சிடப்பட்ட படங்கள் என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.

தங்களது இல்லத்தின் சூழலுக்கு ஏற்ற படங்களைத் தேர்ந்தெடுக்க வும் வழி இருக்கிறது. நீங்கள் விரும்பினால் ஓவியத்தை உருவாக்கிய அந்தப் படைப்பாளியின் கையொப்பத்துடனும் வாங்கலாம். சில படங்களைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வெளியிடுவார்கள். அவற்றை வாங்கி வைத்தால் பின்னாளில் நல்ல விலைக்குப் போகும் என்கிற முதலீட்டு நோக்கிலும் வாங்கி வைப்பவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையிலும் நீங்கள் பயன் பெறலாம். தரமான அச்சு மை, உயர்தர தாள், அமிலத்தால் பாதிக்கப்படாத பரப்பு என்று நீங்கள் விரும்பிக் கேட்கும் விதத்தில் அச்சிட்டு வாங்கலாம். மாதிரிக்காகக் காட்டப்படும் ஓவியங்களில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்தால் போதும். ஓவியம் உங்கள் இல்லம் தேடி வந்துவிடும்.

விவரங்களுக்கு: smartart.in 

Post a Comment

 
Top